Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து உயர தொடங்கியது. அதாவது, கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை என தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.6,120 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து இருந்தது.

இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.