கொஞ்சாக்கோ!
‘‘ நாய்க்கு நாய்ன்னு பேரு வெச்சது யாருடா ?!
பேய்க்கு பேய்ன்னு பேரு வெச்சது யாருடா?!
குரங்குக்கு குரங்குன்னு பேரு வெச்சது யாருடா?!
கொஞ்சாக்கோ… ஹேய்…ஹேய் !’’
என சாதாரண கிட்ஸ் பாடலாக வெளியான கொஞ்சாக்கோ இப்போது இன்ஸ்டாகிராம் ட்ரெண்ட். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது எதாவது ஒரு பாடல், ஆல்பம் சாங், 90ஸ் கிட்ஸ் பாடல்கள் சீசனுக்கு ஏற்றாற் போல் ட்ரெண்டாகும். கடந்த சில நாட்களாக ‘‘ஜீன்ஸ்'' படத்தின் ஹைரா ஹைரா ஹைராப்பா ஹீக் ஸ்டெப் ட்ரெண்டிங்கில் போய் கொண்டிருந்தது. இப்போது ஜீன்ஸ் பாடலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது கிட்ஸ் பாடலான ‘‘கொஞ்சாக்கோ''.
யூடியூப்பில் கிட்ஸ்களுக்காகவே இருக்கும் வென்சிடிவி என்னும் தனியார் யூடியூப் சேனலில் இந்த பாடல் வெளியாகி, அதன் வைப் லிரிக்ஸ், மியூசிக் இதை அப்படியே இன்ஸ்டாவுக்கு கொண்டு சேர்த்தது. இப்போது இன்ஸ்டா ரீல்ஸ் உள்ள போனாலே கொஞ்சாக்கோ பாடல்தான். இதனை விஜய் வீரபாண்டியன் என்கிற இளைஞர் தன்னுடைய அண்ணன் மகள் வென்சி பேசினால் எப்படி பேசுவார் என யோசித்து அதனைப் பாடலாகவே உருவாக்கியிருக்கிறார். இப்போது அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவர் பெயருக்கான பாடல், என் பேரு மாடு, ஆடு, கோழி, இப்படி ஏராளமான ஏஐ பாடல்கள் டிரெண்டிங் மழையில் இன்ஸ்டா நிரம்பி வழிகிறது. எனினும் எந்தப் பாடலும் இந்தக் கொஞ்சாக்கொ டிரெண்டை இன்னும் நெருங்கவில்லை.



