Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

சாம்பியன்!

ஐபிஎல் டி 20 இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. வெற்றி பெற்ற அணிக்கு ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ரன்னர் அப் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம், ரசிகர்களின் உற்சாகம் என அனைத்தும் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. இந்தத் தொடர் கதாநாயகனாக மாறியிருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சூர்யவன்ஷி 15 வயதான சூர்யவன்ஷி அதிக ரன் (775) குவித்த ஆரஞ்ச் கேப் விருது, அதிக சிக்சர் (72) விருது, மதிப்புமிக்க வீரர் விருது, வளர்ந்து வரும் வீரர் விருது, சூப்பர் ஸ்ட்ரைக்கர் (237.30) விருது என 5 விருதுகளை சூர்யவன்ஷி அள்ளினார். ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் பரிசுத் தொகையையும், டாடா சியரா காரையும் வென்றார். தான் வென்ற 5 கோப்பைகளுடன் மைதானத்தில் அமர்ந்து, உற்சாக போஸ் கொடுத்த சூர்யவன்ஷி 2கே அடையாளமாகவும் மாறி டிரெண்டாகி வருகிறார்.

பல மணி நேரம் கூட கேட்பேன்!

இந்த ஒரு மனுஷன் பேசுறதுதான் நான் பலமணி நேரம் கூட கேட்பேன்” என பெண்கள் இணையத்தில் ஒரு புது டிரெண்டை உருவாக்கி வருகிறார்கள். தங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் ஒருவருடன் காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது போல சாட்ஜிபிடியில் உருவாக்கி அதனை பகிர்ந்து ‘ The Only Man I can listen to for hours ’ அதாவது தங்களுக்கு பிடித்த இந்த இசையமைப்பாளர் பேசினால் மட்டும்தான் பல மணிநேரம் கேட்பேன் என இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் ரீல்ஸ் வெளியிட்டு டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் டாப் யுவன் ஷங்கர் ராஜா தான். டீனேஜ் பருவ காதல், காதல் தோல்விகள், என ஒவ்வொரு கட்ட டீனேஜ் வாழ்க்கைக்கும் அதிக பாடல்கள் கொடுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா என்பதால் அவருக்கான ரீல்ஸ் அதிகம் காண முடிகிறது. மேலும் இளையராஜாவின் பிறந்தநாள் கடந்த ஜூன் 2ஆம் தேதி , அவருக்குமான வீடியோக்களும் அதிகமாகக் காண முடிந்தது. இதில் உள்ளூர ஒரு பெண் சுதந்திர மனநிலை இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இது பிடிக்கும் எனச் சொல்ல தைரியம் வந்திருப்பதாகவும். மேலும் நான் கேட்கும் படி நீ பேசினால் நிச்சயம் உன் பேச்சுக்கு செவி கொடுப்பேன் என்பதையும் தயக்கமின்றி பெண்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் காட்டுகிறது இந்த டிரெண்ட்.