கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா, 63வது குருபூஜை விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவின்போது நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக்கவசம் அணிவது வழக்கம். குருபூஜையை முன்னிட்டு கடந்த அக்.24ம் தேதி மதுரை வங்கியில் இருந்து தங்கக்கவசம் பலத்த பாதுகாப்புடன் பசும்பொன் எடுத்து வரப்பட்டு, தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
தற்போது குருபூஜை விழா முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு தங்கக்கவசம் தேவர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டு, மதுரைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வங்கி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. நிகழ்வின்போது அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
