Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘கோ பேக் டூ மோடி’ மனதில் இருப்பதை கொட்டிய பாஜ வேட்பாளர்

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த 15ம் தேதி பிரசாரம் செய்ய பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டவர், ‘கோ பேக் டூ மோடி’ என ஹேஷ்டேக்கையும் பதிவு செய்து இருந்தார். பின்னர் சில மணி நேரத்தில் அவரது எக்ஸ் பக்கத்தை பார்வையிட்டவர்கள், ‘கோ பேக் டூ மோடி’ என பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த வாசகத்தை திருத்தி, ‘ஒன் நேசன், ஒன் தாட்’ என்று பதிவிட்டார். முன்னதாக கோ பேக் டூ மோடி என்று பதிவிட்ட அவரது பதிவு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.