சென்னை: பேரவையில் நேற்று தாக்கல் ெசய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தின் நெல் உற்பத்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்திட, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியை ஊக்குவிக்க மொத்தம் ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர். இதற்காக, திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
