Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை கண்டித்து பேரணி திரிணாமுல்- பாஜ தொண்டர்கள் மோதல்: போலீஸ் தடியடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 11வயது சிறுமி பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணியின்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் பாருய்பூரில் 11வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குளத்தில் உயிருடன் வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தெற்கு கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேரணி நடைபெற்றது.

அப்போது பாஜ தொண்டர்கள் பேரணியை தடுத்தனர். ஹஸ்ரா சாலை வழியாக சென்ற பேரணியை மனித சங்கிலி அமைத்து தடுக்கவும் முயன்றனர். பாருய்பூர் சம்பவம் குறித்து போராட்டப் பேரணியை நடத்துவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை என்று பாஜ தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரணி தொடங்கிய இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரைக்கும் அவ்வப்போது தொடர்ந்து திரிணாமுல் மற்றும் பாஜ தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் மம்தா இல்லத்திற்கு அருகே சென்றபோது இருதரப்புக்கும் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் அங்கு பதற்றமானசூழல் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போலீசார் தடியடி நடத்தினார்கள்.

* பேரணியை பாஜ சீர்குலைத்தது

சிறுமி பலாத்கார கொலை சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணிக்கு பின் ஆதரவாளர்களிடையே பேசிய முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘உயர்நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்தது. ஆனால் பாஜ குண்டர்கள் அதை தடுத்தனர். பேரணிக்கு அனுமதி அளித்த நீதிமன்றத்தின் உத்தரவை காவல்துறை எவ்வாறு மீறமுடியும்? பஜா குண்டர்கள் எங்கள் கட்சித் தொண்டர்களை தாக்கினார்கள். இது தான் ஜனநாயகமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணியை பாஜ சீர்குலைத்தது” என்றார்.