Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுமியை காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி பலாத்காரம்: டிரைவருக்கு தர்மஅடி; உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி: திருச்சியில் 14 வயது சிறுமியை காரில் கடத்தி வாயில் மது ஊற்றி பலாத்காரம் செய்த டிரைவருக்கு மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் 2 இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது 2வது அண்ணன் திருநங்கையாவார். நேற்று 14 வயது சிறுமியும், திருநங்கையான அவரது அண்ணனும் அதே பகுதி கல்மந்தை காலனியில் வசிக்கும் மற்றொரு திருநங்கையான லிபியா  வீட்டுக்கு சென்றனர்.

அங்கு லிபியாக்கு நன்கு பழக்கமான சிவகங்கையை சேர்ந்த தற்போது திருச்சியில் தங்கி கார் ஓட்டி வரும் மாரிச்செல்வன்(43) வந்துள்ளார். மாலை 5.30 மணியளவில் 14 வயது சிறுமியை வெளியில் சென்று வருவோம் என்று மாரிச்செல்வன் காரில் ஏற்றி சென்றார். மாலை 6.30 மணியளவில் திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் சிறுமி மதுபோதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்மந்தை காலனியில் உள்ள சிசிடிவி ேகமராக்களில் பதிவான காட்சிகளை பொது மக்கள் பார்வையிட்டனர். அதில் கார் டிரைவர் மாரிச்செல்வன் சிறுமியை அழைத்து சென்றது உறுதியானது.

இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த மாரிச்செல்வனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் மாரிச்செல்வனின் மண்டை உடைந்தது. மேலும் அவரது காலும் உடைந்தது. பின்னர் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து மாரிச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிறுமிக்கு மதுவை வலுக்கட்டாயமாக கொடுத்து மாரிச்செல்வன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்றிரவு கல்மந்தை பகுதியில் சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதுடன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமி மற்றும் மாரிச்செல்வனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ேபாக்சோவில் மாரிச்செல்வனை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருநங்கைகளுடன் மாரிச்செல்வனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. காரில் மாரிச்செல்வன் எப்போதும் மதுபாட்டில் வைத்திருப்பது வழக்கமாம். நேற்று காரில் அழைத்து சென்றபோது சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது வாயில் மதுவை ஊற்றி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கல்மந்தை பகுதியில் காரை நிறுத்தி சிறுமியை இறக்கி விட்டு விட்டு சென்றது தெரியவந்தது. சிகிச்சையில் உள்ள 2 பேருக்கும் மயக்கம் தெளிந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.