Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி போலீசார் 14வது நாளாக விசாரணை!

விழுப்புரம்: செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி போலீசார் 14வது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது 7 வயது சிறுமி, கடந்த 12ஆம் தேதி அதிகாலை மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து, இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் கடந்த 14 நாட்களாக தொடர்ந்து, சிறுமியின் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜதுரையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவரது நண்பர் அரவிந்த் ஆடு மேய்க்கும் வேலையை செய்து வருகிறார். இவருக்கும் ராஜதுரைக்கும் இவ்வழக்கில் எதாவது தொடர்புள்ளது என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 14 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரித்தும் இவ்வழக்கில் இதுவரை எவ்விதமான துப்பும் கிடைக்காத நிலையில், இந்த இளைஞர்களிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.