Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜெர்மனி அதிபருடன் மோடி பேச்சு

புதுடெல்லி: ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்சு உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலமாக உரையாடினார். இந்த உரையாடலின்போது இரு நாட்டு மக்களின் நலனுக்காக, எதிர்கால நோக்குடைய தங்களது உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா மற்றும் ஜெர்மனி தொடர்ந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘ இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும்வேளையில் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் எங்களது உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.