Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மரபணு மாற்றப்பட்ட தயாரிப்புகள் இறக்குமதிக்கு ஒருபோதும் அனுமதியில்லை: தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் திட்டவட்டம்

புதுடெல்லி: மரபணு மாற்றப்பட்ட தயாரிப்புகளை இந்தியா ஒருபோதும் இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்காது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில்,‘‘நாங்கள் சில விவசாய பொருட்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் போன்ற சிற குறிப்பிட்ட பொருட்கள் விஷயத்தில் மிகவும் கவனமாகவும் உணர்திறனுடனும் செயல்படுகிறோம்.

பால் பண்ணைத்துறையில் யாரையும் அனுமதித்ததில்லை. மரபணு மாற்றப்பட்ட தயாரிப்புகள் இந்தியாவுக்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுவரை நாங்கள் அதனை அனுமதிக்கவில்லை. எதிர்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.

எங்களின் மத உணர்வுகளையும் நாங்கள் மதிக்கிறோம். வெளிநாடுகளில் பால் பண்ணை தயாரிப்புகளை உருவாக்கும்போது கன்றின் இறைச்சி அல்லது ரென்னெட் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்தியாவில் நாங்கள் அதனை அனுமதிப்பதில்லை.இது கண்டிப்பாக சான்றளிக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவின் பெரும்பகுதியினரின் மத உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இருக்கும்” என்று தெரிவித்தார்.