Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கெய்ல் இன்று கேரளா வருகை

கேரள கிரிக்கெட் லீக் போட்டிகள் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான கிறிஸ் கெய்ல் போட்டியை பார்ப்பதற்காக இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர், பிற்பகலில் திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் மற்றும் திருச்சூர் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையான போட்டியை பார்க்கிறார். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்தப் போட்டிக்கு முன்னதாக கிரிஸ் கெய்ல் சிறப்பு பேட்டிங் செய்ய உள்ளார்.