வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதால், ஆற்றில் படகுகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் கணக்குப்படி, கங்கையின் நீர்மட்டம் 70.29 மீட்டராக உயர்ந்துள்ளது. அபாய அளவு 70.26 மீட்டராகும். நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கங்கை மற்றும் வருணா ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 935 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement




