சென்னை: கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தமிழ் மண்ணின் தலைசிறந்த வீராங்கனை வேலுநாச்சியார் வீரத்தினை வருங்கால தலைமுறையினர் அறிந்து போற்றிடும் வகையில், சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வேலுநாச்சியார் திருவுருவச் சிலை நிறுவப்படும் என 2024-2025ம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 50 இலட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (19ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.