Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிக்கனியை பறிக்க பணத்தைக் கொட்டி கொடுக்க தயாராக இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாதம் இவ்வளவு என டார்கெட் வைத்து வசூலில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரியை பார்த்து ஊழியர்கள் திகைத்து நிற்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் சுகாதார பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடம், கடைகளில் இருந்து பணம் வசூலித்து கொடுக்கவேண்டும் என பிரஷர் கொடுக்கிறாராம்.. மாநகரில் டீ கடைகள், பெட்டி கடைகள், ஒர்க்‌ஷாப்புகள், மளிகை கடைகள் உள்ளிட்ட சிறு சிறு கடைகள் அமைக்க, மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து, லைசென்ஸ் பெறணும்.. இதுபோன்ற விண்ணப்பங்கள் வரும்போது ஒன்றுவிடாமல் அத்தனையிலும் காசு பார்த்து விடுகிறாராம் அந்த அதிகாரி.. யாரேனும் சம்திங் கொடுக்க மறுத்தால், விண்ணப்பம் தொலைந்துவிட்டது.. வேறு விண்ணப்பம் சப்மிட் செய்யுங்கள்னு கூலாக பதில் சொல்லி விடுகிறாராம்.. மாதம் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் என டார்கெட் நிர்ணயித்து தட்டி எடுக்கிறாராம்.. லஞ்ச பணத்தை பயன்படுத்தி பினாமி பெயர்களில் தோட்டம், அடுக்குமாடி குடியிருப்பு, வாகனங்கள் என சொத்து வாங்கி குவித்துள்ளாராம்.. வசூலில் இவரது அபார ஆட்டத்தை பார்த்து, பிற ஊழியர்கள் திகைத்து போய்விடுகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகாரிகளின் அட்ஜெஸ்மெண்ட் காரணமாக, வெளிமாநிலத்துக்கு அரிசி கடத்தல் தடையில்லாம நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருந்து ரேஷன் அரிசி கடத்தல் தடையில்லாம நடந்து வருதாம்.. இந்த கடத்தலை தடுக்க வழங்கல், உணவு கடத்தல் தடுப்பு காக்கி, பறக்கும்படை, ரயில்வேத்துறை என்று பலதுறைகள் இருக்குது.. இதுல முழு நேரமாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்குற பணிகளில் ஈடுபடுவது பறக்கும்படையும், உணவுகடத்தல் தடுப்பு காக்கிகளும் தான்.. இந்த படையில் உள்ள அதிகாரி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிஞ்சு வர்றாராம்.. இவர், உணவு கடத்தல் தடுப்பு காக்கிகளுடன இணைந்து ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் ரயிலு, இருசக்கர வாகனம், ஆட்டோக்கள்னு நடக்குற கடத்தலை கண்டுகொள்வதில்லையாம்.. இந்த கடத்தல் அரிசிகளை மாபியா கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி பாலீஷ் போட்டு திரும்பவும், தமிழ்நாட்டுக்கு வேற வடிவத்துல அனுப்பி வச்சு பயங்கரமா கல்லா கட்டுறாங்களாம்.. இதுல கணக்கு காட்டுறதுக்கு மட்டும், ரேஷன் அரிசி பிடிச்சதா வழக்குகளை பதிவு செய்றாங்களாம்.. இப்படி மாபியாக்களுடன் சில அட்ஜெஸ்மெண்ட் செய்துகிட்டு, சம்திங் பார்த்துடுறாங்களாம்.. இதனால, ரேஷன் அரிசி கடத்தல் தடையில்லாம நடக்குதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க புகாராக சொல்றாங்க.. உயர் அதிகாரிங்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கடவுள் பெயரை கொண்ட மாஜிக்கள் ரெண்டு பேரும் சீட் வாங்கி விடக்கூடாது என்பதில் செல்லூர்க்காரர் ரொம்ப தீவிரம் காட்டுகிறாரமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகரத்து இலைக்கட்சியில் செல்லூர்காரர், உதயமானவர் மற்றும் செல்லமானவர் என மூவர் தலைமையில் 3 கோஷ்டிகளாக செயல்பட்டு வர்றாங்க.. இதில், செல்லூர்காரர் மற்றும் செல்லமானவர் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் நிர்வாகிகள் பலர் உதயமானவரின் அணியில்தான் இருக்கிறார்களாம்.. இவர்கள் செல்லூர்காரரையும், செல்லமானவரையும் கண்டுகொள்வதில்லையாம்.. இவர்கள் இருவராலும் தங்களுக்கு சீட் வாங்கித் தர முடியாது என்பதால் உதயமானவரை நம்பியே சுற்றி சுற்றி வருகின்றனராம்.. இதனால், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், உதயமானவருடன் நெருக்கமாக இருப்பவர்களில் யாரும் சீட் வாங்கி விடக் கூடாது என்பதற்காக இருவரும் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. குறிப்பாக முருக கடவுளின் பெயர் கொண்ட மாஜிக்கள் இருவருக்கு இரு தொகுதிகள் போய்விடக் கூடாது என்பதை மனதில் ைவத்து தெர்மாகோல் புகழ் செல்லூர்காரர் ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெற்றிக்கனியை ‘விட்டமின் ப ’ கொடுத்தாவது பறித்து விடலாம் என்கிற கனவில் இலைக்கட்சி மாஜி அமைச்சர் இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கொசுவலை மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் விஜயமானவர், இந்த முறை கொசுவலை மாநகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடலாம் என்ற ‘அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறாராம்.. இதற்காக அவரது ஆதரவாளர்களுடன் மாஜி அமைச்சர் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து வருகிறாராம்.. இதில் அவரது அதீத நம்பிக்கை வெற்றி பெறாது என கட்சியில் உள்ள தொண்டர்களுக்கே தெரியுமாம்.. இருந்தாலும் ‘விட்டமின் ப ’ அதிகளவு கொடுத்தாவது வெற்றி கனியை பறித்து விடலாம் என கனவில் மாஜி அமைச்சர் இருக்கிறாராம்.. ‘விட்டமின் ப’ கொட்டி கொடுத்தாலும், கொட்டி கொடுக்காமல் இருந்தாலும் அவருடைய கனவு நிறைவேறாது என சொந்த கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.