Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிரியா வருகை: 2 இடங்களில் குண்டுவெடிப்பால் பதற்றம்

டமாஸ்கஸ்: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிரியா அதிபரை சந்தித்த நிலையில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 4 பேர் காயமடைந்தனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். சிரியா அதிபர் அஹ்மத் அல் ஷாராவை சந்திப்பதற்காக அவர் அதிபர் மாளிகைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் டமாஸ்கஸில் அதிபர் மேக்ரான் தங்கியிருந்த போர் சீசன்ஸ் ஓட்டலுக்கு அருகில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 4 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். ஒட்டல் அருகில் இருந்த குப்பைத் தொட்டியிலும், மற்றொன்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரிலும் வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 4 பேர் காயமடைந்தனர். உடனடி உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் பதிவாகவில்லை. அல் ஷரா ஆட்சிக்கு வந்தபிறகு சிரியாவிற்கு வருகை தந்த முதல் முக்கிய மேற்கத்திய நாட்டு தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியின் அங்காராவில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பாக அதிபர் மேக்ரான் சிரியா வந்தது குறிப்பிடத்தக்கது. சிரியா மீதான பெரும்பாலான தடைகளை ஐரோப்பாவும், அமெரிக்காவும் கைவிடுவதற்கு அழுத்தம் கொடுப்பதில் மேக்ரான் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.