Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரான்சு அரசின் உயரிய விருது தோட்டாதரணிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: ஆக்சுபோர்டு-இல் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!

அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி , இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்.