பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் இருண்ட நாட்கள்: முன்னாள் அதிபர் பைடன் விமர்சனம்
வாஷிங்டன்: அமெரிக்க மாஜி அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர் பையில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில், எட்வர்டு கென்னடி மையம் சார்பில் வாழ்நாள் கால சாதனையாளர் விருது பைடனுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஜோ பைடன் பேசும்போது: வரையறுக்கப்பட்ட அதிகாரம் கொண்ட அதிபர் பதவி, செயல்படும் நாடாளுமன்றம் மற்றும் தன்னாட்சி உடைய நீதித்துறையை அமெரிக்கா சார்ந்துள்ளது. பெடரல் அரசு அதன் இரண்டாவது மிக நீண்ட முடக்கத்தை எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் அரசாங்கத்தின் மீது புதிய கட்டளையைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாக நிதி இழப்பைப் பயன்படுத்தியுள்ளார். நண்பர்களே, இதில் எதையும் நான் மறைக்க முடியாது.பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் நிர்வாக அதிகார வரம்புகள் மீதான சோதனைகள் அதிகரித்துள்ளன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவை இருண்ட நாட்கள் ஆகும். அதில் இருந்து மக்கள் மீண்டு எழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.