Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6 இலவச சிலிண்டர் வாக்குறுதி என்னாச்சு?.. திமுக, அதிமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர்: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சென்னை: தவெக அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; தவெக அரசின் பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களாகியும் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. வெறும் வசனங்களை பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தவெக ஆட்சியில் ரீல்ஸ், மீம்ஸே சாதனையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் தவெக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.22 லட்சத்தில் மருத்துவக் காப்பீடு திட்டம் என்றார்கள், ஆனால் ஏமாற்றம். நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறையை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பதை கூறவில்லை.

பட்ஜெட் என்ற பெயரில் பழைய திட்டங்களின் பெயரை மாற்றி அறிவித்துள்ளார்கள். கடன் வாங்கி மட்டுமே திட்டங்களை செயல்படுத்தக்கூடிய நிலையில் தவெக அரசு உள்ளது. குழு அமைத்துவிட்டால் மாநில வருவாயை பெருக்கிவிட முடியுமா? வெறும் வசனங்களை பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். திமுக, அதிமுக திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் தவெக அளித்த 6 இலவச சிலிண்டர் வாக்குறுதி என்ன ஆனது?

மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதிமுகவின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் பெயரை மாற்றி அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. பயிர்க்கடன் தொடர்பாக தவெக அரசு வெளியிட்ட அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை. குழு அமைத்துவிட்டால் மாநில வருவாயை பெருக்கிவிட முடியுமா? கடன் வாங்கவே நிபுணர் குழுவை தவெக அரசு அமைத்துள்ளது என்று கூறினார்.