Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலதிபரிடம் ரூ.2 கோடி பறிப்பு; மோசடி மன்னன் லயன் முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு

சென்னை: அண்ணாநகர் தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.2 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள மோசடி மன்னன் முத்துவேலை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகரை ேசர்ந்த தொழிலதிபர் மணிவண்ணன். இவர், துறைமுகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க செயற்கை மீன் பாறை அமைக்கும் ஒப்பந்ததாராக உள்ளார். தனது தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் ஒரு நண்பர் மூலம் வில்லிவாக்கத்தை சேர்ந்த லயன் முத்துவேல் என்பவர் அறிமுகமானார். அவரிடம் தொழில் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி கடன் வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்காக லயன் முத்துவேல் தனக்கு ரூ.2 கோடி முன் பணம் தந்தால் கடன் பெற்று தருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

அதன்படி தொழிலதிபர் மணிவண்ணன் ரூ.2 கோடி பணத்தை லயன் முத்துவேலிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் சொன்னப்படி எனக்கு கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் மணிவண்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆந்திரா ஓங்கோலில் தலைமறைவாக இருந்த லயன் முத்துவேலை கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்தனர். மேலும், விசாரணையில் லயன் முத்துவேல் இதுபோல் பலரிடம் பணம் பெற்று தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் லயன் முத்துவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமஷனர் அமல்ராஜுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி கமிஷனர் லயன் முத்துவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.