Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோல்மால், ஊழல்களை திசை திருப்ப ஆதாரமற்ற குற்றச்சாட்டு; அமைச்சர் நிர்மல்குமார், தவெக எம்எல்ஏக்கள் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்: உதயகுமார் எச்சரிக்கை

உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், எதிர்த்து வாக்களிக்கும்படி என்னிடம் பேரம் பேசினார்கள். 30 கோடி ரூபாய் வரை தருவதாக அதிமுக பிரமுகர் ஒருவர் என்னிடம் பேசினார் என்று மதார் பதூருதீன் எம்எல்ஏ ஒரு கதை விட்டிருக்கிறார். அதேபோல் அமைச்சர் நிர்மல்குமார், ‘தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுகவும், அதிமுகவும் கூட்டுச் சதி செய்கிறது’ என்று முற்றிலும் ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

இந்த கோமாளி அமைச்சர் தான் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டவர். இதே நேரத்தில் கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50க்கு வாங்கியிருக்கிறது. தங்கள் கோல்மால், ஊழல்களை திசை திருப்புவதற்காக அதிமுகவின் பெயரைத் தேவையின்றி இழுத்துப் பேசுவதை அமைச்சர் நிர்மல்குமாரும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

அதிமுகவுக்கு ஜனநாயக ரீதியில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வரத் தெரியும். குறுக்குவழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் அரசியல் நாடகம் நடத்துவதை விட்டுவிட்டு, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும். அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார்.