Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பதவிப்பிச்சை கேட்டு திருவோடு ஏந்துவதைவிட ஒரு சாண் கயிற்றில் தொங்கி உயிரை மாய்த்து கொள்ளலாம்: அதிமுக மாஜி அமைச்சர் காட்டம்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்றைய வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

அரசியல் அனாதைகளாலும், ஆதரவற்றவர்களாலும் தவெக நிரம்பி வழிகிறது. விஜய் மன்றத்தில் 30 ஆண்டு காலம் சேவையாற்றிய மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் தகுதி, எதிர்பார்ப்பு, ஆர்வத்தில் இருக்கிறபோது, அரசியல் அடைக்கலம் தேடி வந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வாரி வழங்கி வள்ளலாக காட்சியளிக்கிற விஜய்யின் ரகசிய திட்டம் என்ன தெரியுமா? எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை அபகரிக்கும் திட்டத்திலே அடுத்தடுத்து அரசியல் அதிகாரம் என்கிற அதிரடி ஆபர்களை அறிவித்து, அதிமுக இயக்கத்திலே இப்போது ஆடுபுலி ஆட்டத்தை அரங்கேற்றி வைத்து ராஜினாமா நாடகத்தை ஒவ்வொரு நாளும் நடத்தி, விபரீத விளையாட்டுகளை சந்தோஷமாக, தன் மனதுக்குள் விஜய் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா போட்ட பிச்சையில் அரசியல் வாழ்வு பெற்றவர்கள், எடப்பாடி பழனிசாமியின் காலை, கையைப் பிடித்து காரியம் சாதித்து வாழ்வை வசந்தமாக்கிக் கொண்டார்கள். சூராதி சூரர்களென வீரத்தோடு மார்தட்டி நின்றவர்கள் எல்லாம், பனையூரில் அடைத்த கேட்டை அடித்து பிடித்து உள்ளே தள்ளி பதவிப் பிச்சை கேட்டு திருவோடு ஏந்தி பனையூருக்கு பயணிக்கிற பாவிகளாகியுள்ளனர்.

இந்த ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு ஒரு சாண் கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்ளலாம். பதவி கேட்டு உங்கள் வீட்டில் திருவோடு ஏந்தி காத்து கிடக்கிற அந்த ஈனப்பிறவிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சொல்கிறோம் இந்த ஈனப் பொழப்பு பிழைப்பதை விட, நாலு வீட்டில் பிச்சை எடுத்து வாழ்ந்துவிடலாம் என்பது தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக உள்ளது. இவ்வாறு காட்டமாகப் பேசியுள்ளார்.