Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்எல்ஏ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2006 சட்டமன்ற தேர்தலின் போது தன்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அப்போது தனது சகோதரரும், மைத்துனரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர், தனக்கும், தனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் 2021ல் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது. தற்போது தொடர் மிரட்டல்கள் வருவதால் சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இது தொடர்பான வழக்குகளையும், புகார்களையும் சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவது குறித்து வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளதால் அதனை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை. தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையை சி.வி.சண்முகம் நிரூபித்துள்ளார். எனவே, அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.