Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடய அறிவியல் ஆய்வு மையத்தில் 51 அதிகாரிகள்

பணியிடங்கள் விவரம்:

1. பிரிவு அலுவலர்: (செக்சன் ஆபீசர்): 12 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 21 முதல் 40க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், கம்ப்யூட்டர் அறிவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

2. துணைப் பிரிவு அலுவலர்: 14 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-4, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 21 முதல் 40க்குள். தகுதி: ஏதொவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

3. அசிஸ்டென்ட்: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-2). வயது: 21 முதல் 40க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.nfsu.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026.