Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

என்ஆர்ஐகளிடமிருந்து 127.23 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி வரவு

மும்பை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்களின் அமெரிக்க டாலர் கரன்சியை இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி சிறப்பு அமெரிக்க டாலர்-ரூபாய் அந்நிய செலாவணி மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் 8ம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் திட்டமிடப்பட்ட செப்டம்பர் 30ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 31ம் தேதி முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 31 வரை கிடைத்த தற்காலிக தரவுகளின் அடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் 127.23 பில்லியன் டாலர் (ரூ.10.8 லட்சம் கோடி) மதிப்பிலான நிரந்தர வைப்புகளை என்ஆர்ஐகள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு நாணய கடன்கள் உட்பட மொத்தம் 136.377 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி வரவு கிடைத்துள்ளது.