வெளிநாடுகளுக்கு விதிமீறி ஆட்களை அனுப்பிய 40 ஏஜென்டுகளின் உரிமம் ரத்து: பஞ்சாப் போலீஸ் அதிரடி
Advertisement
அதனால் தற்போது நாடு கடத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி பயண முகவர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாஹ்ன் கூறுகையில், ‘வெளிநாடுகளுக்கு உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பி வைத்த பயண முகவர்கள் 40 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களின் மையங்களும் மூடப்பட்டன. சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Advertisement