வெளிநாட்டு தொடர்பு குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா...? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பகிரங்க சவால்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், \\”வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பது யார்? என்பது குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு 24 மணி நேர சவால் விடுக்கிறேன். எந்த நேரத்திலும், எந்த மேடையிலும் விவாதத்திற்கு நான் தயார். மோகன் பகவத் போன்ற யாரை வேண்டுமானாலும் நடுவராக நியமித்துக் கொள்ளுங்கள். ஊடகம் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் உண்மைகள் வெளிவரட்டும். அஞ்ச வேண்டாம், உங்களுக்குத் துணிவிருந்தால் வாருங்கள் மோடி ஜி\\” என்று கூறியுள்ளார்.


