Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உலக கோப்பை கால்பந்து தொடர்; ரவுன்ட் ஆப் 32 சுற்றில் போர்ச்சுக்கல் த்ரில் வெற்றி: குரோஷியாவை 2-1 என வெளியேற்றியது

டொராண்டோ: 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் தற்போது ரவுன்ட் ஆப் 32 சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. கனடாவின் டொராண்டோ மைதானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி் நடந்த போட்டியில் போர்ச்சுக்கல்அணி குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது. முதல் பாதியில் இரு அணிகளும் மிகச் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், எந்தவொரு கோலும் அடிக்கப்படவில்லை . 2வதுபாதியில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குரோஷியாவின் நட்சத்திர வீரர் இவான் பெரிசிக் அபாரமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இதற்கு பதிலடியாக 68வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, 41 வயதான கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மிகச்சரியாக கோலாக மாற்றினார். இதன் மூலம் உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் தனது முதல் கேரியர் கோலை பதிவு செய்து சாதனை படைத்தார்.

90 நிமிடத்தை கடந்தும் 1-1 என சமநிலை இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+4’ நிமிடம்), மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த போர்ச்சுக்கல் வீரர் கோன்சலோ ராமோஸ், கோன்சலோரஃபேல் லியோ கொடுத்த அருமையான கிராஸை ஹெடர் மூலம் (தலையால் முட்டி) கோலாக மாற்றினார். போட்டியின் கடைசி வினாடிகளில் (103-வது நிமிடம்) குரோஷியாவின் ஜோஸ்கோ கிவார்டியோல் கோல் அடிக்க , ஆட்டத்தை சமன் செய்ததாக கொண்டாடினர். ஆனால், நடுவர்கள் வீடியோவை ஆய்வுசெய்து கோல் அடிப்பதற்கு முன்பாக மரியோ பாசலிக் ஆஃப்சைடில் இருந்ததை உறுதி செய்து கோலை நிராகரித்தனர். இதனால் 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் த்ரில் வெற்றி பெற்று ரவுன்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. குரோஷியா தொடரிலிருந்து வெளியேறியது. ரவுன்ட் ஆப் 16 சுற்றில் வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினுடன் போர்ச்சுக்கல் மோதுகிறது.

ரொனால்டோவின் வரலாற்று சாதனை;

* 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக்கோப்பை வரலாற்றின் ‘நாக்-அவுட்’ சுற்றில் முதல் கோலை பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.

* போர்ச்சுக்கல் கோல்கீப்பர் தியோகோ கோஸ்டா, குரோஷியாவின் 5 கடினமான கோல் வாய்ப்புகளை தடுத்து வெற்றிக்கு பெரும் தூணாக நின்றார்.

* 57வது நிமிடத்தில் குரோஷியாவின் புடிமிர் , 80வது நிமிடத்தில் சுசிக் , 103வது நிமிடத்தில் கிவார்டியோல் அடித்த கோல்கள் ஆஃப்சைடு நிராகரிக்கப்பட்டது.

இது குரோஷியாவுக்கு பெரும் துரதிர்ஷ்டமாக அமைந்தது.