Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சர்வதேச கால்பந்து போட்டியில் ஓய்வு: எல்லாம் முடிந்தது... நெய்மர் வேதனை

நார்வே அணியிடம் தோற்று வெளியேறிய நிலையில், பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி அறிவித்தார். 2010ல் அறிமுகமான நெய்மர் தாய்நாட்டுக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல் அடித்து பிரேசில் வீரர்களில் முதலிடம் வகிக்கிறார்.

16 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் முத்திரை பதித்து வந்த நெய்மர், சமீப காலமாக பல்வேறு காயங்களால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வந்த நிலையில், நடப்பு உலக கோப்பையுடன் விடை பெற்றுள்ளார். ’நான் முயற்சித்தேன்… கடுமையாக முயற்சித்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இங்குதான் தொடங்கினேன்… இங்கேயே முடிக்கிறேன்’ என்ற அவரது வேதனை பேட்டி பிரேசில் கால்பந்து ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கியுள்ளது.