Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

Food spot

பொடி இட்லி

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் சென்ட்ரல் வந்ததும், அங்கு ஒரு நல்ல உணவகத்தில் சென்று சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வருபவர்கள் தேடி வந்து சாப்பிடக்கூடிய இடமாக இருக்கிறது சீனா பாய் டிபன் சென்டர். பொடி இட்லி, தோசை என ஒவ்வொன்றும் தாறுமாறான டேஸ்ட்டாக இருக்கும். இட்லியை வைத்து விட்டு ரெண்டு கரண்டி நெய்யை ஊற்றி, அதன் மேலே மிளகாய்ப் பொடியும், இட்லிப் பொடியும் கலந்த ஒரு பொடியை மேலே தூவி, அதனோடு கொஞ்சம் கொத்தமல்லி சட்னி, வெங்காயச் சட்னியை மட்டும் கலந்து கொடுக்கிறார்கள். இதுபோல சிறிய இட்லி கொடுப்பதற்கான காரணம் என்ன என்பது ஒரு சிறிய ரகசியம்தான். அதாவது சிறிய இட்லித் துண்டை எடுத்து கரண்டி அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதற்கும், பெரிய இட்லித் துண்டை எடுத்து ஸ்பூன் அளவு நெய்க்கு தொட்டு சாப்பிடுவதும்தான் வித்தியாசம். நல்ல பொடி இட்லி சாப்பிடுவதற்கு தரமான ஸ்பாட் என்றால் அது சீனாபாய் டிபன் சென்டர்தான்.

கொத்து பரோட்டா

பிரியாணிக்கான பெஸ்ட் ஸ்பாட்களில் ஒன்று குரோம்பேட்டை பிலால். இங்கு பிரியாணி மட்டுமில்லாமல் கொத்து பரோட்டாவும் ரொம்ப ஃபேமஸ். பிரியாணிக்கு எந்தளவுக்கு ஆர்டர்கள் வருகிறதோ, அதேபோல கொத்து பரோட்டாவுக்கான ஆர்டர்களும் குவிகின்றன. ஒவ்வொரு முறையும் தோசைக்கல்லில் இருபதுக்கும் அதிகமான கொத்து பரோட்டாவை ஏற்றுகிறார்கள். நல்ல பொன்னிறமாக வறுத்த ஆனியன் மீது முட்டையை ஊற்றி தேவையான மசாலா சால்னா கலந்து சில்லி பரோட்டாவைப் போட்டு கொத்து எடுக்கிறார்கள். இவர்கள் கொத்து பரோட்டாவை கொத்தும் சப்தம் அந்த தெரு முக்கு வரைக்கும் கேட்கிறது. அந்த சப்தத்தைப் பிடித்து நடந்தாலே போதும் பிலால் கடையோட பிரியாணி வாசம் நம்மைக் கடை அருகிலேயே கொண்டுபோய் விட்டு விடும்.

இன்ஃபூஷ்டு சிக்கன்

கொஞ்ச காலத்திற்கு முன்பு திரும்பும் இடமெல்லாம் ஃபுட்டிகளின் கான்வர்சேஷனில் ஜப்பான் சிக்கன் இடம் பெற்றிருந்தது. இன்றைக்கு அதை மிஞ்சும் அளவுக்கு ஒரு புதிய நான் வெஜ் டிஷ் வந்துவிட்டது. அந்த டிஷ்ஷும் சிக்கன் வெரைட்டிதான். அதன் பெயர் இன்ஃபூஷ்டு சிக்கன். வேளச்சேரியில் இருக்கிற டொசிடொ என்ற ரெஸ்டாரன்டில்தான் இந்த இன்ஃபூஷ்டு சிக்கன் கிடைக்கிறது. இந்த சிக்கனோடு சாப்பாடும் கானும் கொடுக்கிறார்கள். இந்த சிக்கனை டைனிங் டேபிளில் பரிமாறுகிறார்கள். பின்னர் அதன் மீது ஃபயர் அடித்து வேக வைக்கின்றனர். லெக் பீஸை இழுக்கும்போது அதன் உள்ளிருக்கும் சாந்தின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. ஒரு தரமான இன்ஃபூஷ்டு சிக்கன் சாப்பிடுவதற்கு டோசிடோ நல்ல ஸ்பாட்.