Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

Food spot

பாரம்பரிய பலகாரங்கள்

அமெரிக்க உணவுகள் முதல் ஹாங்காக் உணவுகள் வரை நம்ம சென்னையில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. ஆனால் நமது தமிழகக் கிராமங்களில் எளிமையாக வீட்டில் செய்யும் பாரம் பரியமான பலகாரங்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதற்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் நமது அசலான கிராமத்துச்சுவை கிடைப்பதில்லை. சாலிகிராமம் தசரதபுரம் பகுதியில் வசிப்பவர்களுக்கும் இந்தக் கவலையே இல்லை. இங்குள்ள காமராஜர் தெருவில், பாலுமகேந்திரா ஸ்டுடியோ எதிரில் ஒரு முதியவர் முறுக்கு, அதிரசம், எள்ளடை போன்ற நமது பாரம்பரிய பலகாரங்களை விற்பனை செய்து வருகிறார். கலப்படம் எதுவும் இருக்காது. சாப்பிட்டால் நம்ம வீட்டில் செய்த பலகாரத்தைச் சாப்பிடுவது போன்ற உணர்வு கிடைக்கும். விலையும் மிகக் குறைவுதான். இவர் மிகக் குறைந்த அளவிலேயே செய்து எடுத்து வருவார் என்பதால் விரைவில் விற்பனையை முடித்துவிட்டு கிளம்பி விடுவார். முந்துவோர் முத்தெடுக்கலாம்.

கூல் கூல் பழ ஜூஸ்

இந்த வருசம் வெயில் ஜாஸ்தி. இதைத்தான் நாம் ஒவ்வொரு ஆண்டின் கோடையிலும் சொல்லி வருகிறோம். ஆனாலும் இந்த ஆண்டில் உண்மையாகவே வெயில் ஜாஸ்திதான். ஒரு 15 நிமிடம் வெளியில் சென்றாலே உடல் முழுக்க சூடு வைத்தது போல் ஆகிவிடுகிறது. சமீப நாட்களாக மழை பெய்தாலும், வெயிலின் உக்கிரம் குறையவில்லை. இதனால் மக்கள் ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் குவிந்து வருகிறார்கள். ராதாகிருஷ்ணன் சாலையில் கதீட்ரல் தேவாலயம் அருகே சாலையோரம் இயங்கிவரும் சாதாரண ஒரு ஜூஸ் கடையில் தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜூஸ்க்காக வருகிறார்கள். பழரசம், ஆப்பிள் ஜூஸ், சர்பத் என இங்கு கிடைக்கும் அனைத்து ஜூஸ்களும் வேற லெவல். இதனால் வெயில் காலம் மட்டுமின்றி மற்ற சாதாரண நாட்களில் கூட இந்தக் கடையின் ஜூஸூக்கு ஏகப்பட்ட கிராக்கி.

அவல் மில்க்

அப்பம், புட்டு, கடலைக்கறி போல கேரளாவில் பிரபலமான ஒன்று அவல் மில்க். அவல் மற்றும் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த டிரிங்க் நம்ம ஊரில் கிடைக்கும் ரோஸ்மில்க் போல அவ்வளவு ருசி. அத்தகைய அவல் மில்க் சென்னையில் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் ஓஎம்ஆரில் உள்ள பானாவில் என்ற கடைக்கு செல்லலாம். சாக்லேட் மற்றும் பல வகையான நட்ஸ் சேர்க்கப்பட்ட இந்த அவல் மில்க் மொத்தம் 80 ெவரைட்டிகளில் கிடைக்கிறது.