Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* ஆப்பிள், ரோஜா இதழ், குங்குமப் பூ, ஏலக்காய், தேன் ஆகியவற்றை சேர்த்து தினமும் பெண்கள் சாப்பிட்டு வர சுகப் பிரசவம் ஏற்படும்.

* உணவில் சுண்டைக்காயை சேர்த்து வந்தால் வயிற்று புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.

* ஆப்பிள், இஞ்சி, எலுமிச்சை சாறு, வெள்ளைப் பூண்டு இவற்றை அரைத்து கொதிக்க வைத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி, கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நன்கு ஜீரணமாகும்.

* நீரில் மிளகுத் தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அதில் நனைத்த துணியை சுளுக்கு உள்ள இடத்தில் போட்டால் சுளுக்கு நீங்கி குணமாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் குழைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும்.

* வசம்பு இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத் தெடுத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாக அழகுபெறும். தோல் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

* தினமும் இரவில் ஒரு செல்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

* தினமும் காலையில் மிளகுத் தூள் கலந்த ஒரு டம்ளர் அன்னாசிப் பழச்சாறு சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

* வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

* எலுமிச்சம்பழ விதைகளுடன் சிறிது உப்பும் சேர்த்து அரைத்தெடுத்து தண்ணீரில் கலந்து குடித்தால் தேள்கடி விஷம் நீங்கும்.

* நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்தெடுத்து வெட்டுக்காயங்கள் மீது பூசி வந்தால் காயங்கள் ஆறி குணமாகும்.

* தேனில் மிளகு தூளை தூவி தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

* முள்ளங்கியை துருவி மேலாக சிறிது தேனை விட்டு தினமும் சாப்பிட்டு வர உடலில் இருக்கும் தேவையற்றக் கொழுப்பு குறையும். அத்துடன் உடல் பருமனும் குறையும்.

* தினமும் காலையில் அத்திப் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குறையும். இதயம் பலப்படும்.

* கறிவேப்பிலை, மஞ்சள், கசகசா ஆகிய மூன்றையும் அரைத்தெடுத்து அம்மைத் தழும்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் அம்மை தழும்புகள் படிப்படியாக குறையும்.

* அகத்திக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து உண்டால் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கும்.

* தினமும் காலையில் சாப்பாட்டிற்கு பிறகு பாதாம் பொடியில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

* முட்டைக்கோஸ், தக்காளி, கேரட் ஆகியவற்றை அடிக்கடி பச்சையாக சாப்பிட்டு வந்தால் முகத்தில் பருக்கள் வராது.

* கம்பளிப்புழு கடித்த இடத்தில் முருங்கை இலையை அரைத்தெடுத்து பற்று போட்டால் அரிப்பு வராது.

- இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி