Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* உணவுடன் முள்ளங்கி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், கண்வலி தீரும்.

* தேயிலையை கொஞ்ச நேரம் வெயிலில் வைத்து பிறகு டீ தயாரித்தால் சூப்பராக இருக்கும்.

* வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

* கொத்தமல்லி தழை அரைக்கும் போது மிளகாய்க்கு பதில் மிளகை வறுத்து அரைத்தால் மணம் மாறுதலாக இருக்கும்.

* பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல்குணமாகும்.

* ஓமத்தை சிறிது நீர்விட்டு அரைத்து பசைபோல செய்து பற்றுப்போட்டால் வயிற்று வலி குணமாகும்.

* திடீரென வயிறுவலி ஏற்பட்டால் இரண்டு, மூன்று பூண்டை தின்று விழுங்கினால் குணம் கிடைக்கும்.

* ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வந்தால் அக்கி குணமாகும்.

* இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய் ஊற்றிக் கொள்வதற்கு பதில் தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சுவையாக இருக்கும்.

* கண், மூக்கு, வாய் இவற்றில் உள்ள சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு சாறை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி சற்று நேரம் கழித்து கழுவலாம். முகம் பளிச்சென இருக்கும்.

* புதினாவை காயவைத்து பொடி செய்து கூடவே உப்புக் கலந்து பல் தேய்தால் பல் வலி, வாய் நாற்றம் மாறும்.

* கொய்யாப்பழம் தினம் ஒன்று வீதம் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் சரியாகும்.

* வாழைப்பூவை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உதிரப்போக்கு நின்று விடும்.

* மண் பானையில் வெண்ணெய் போட்டு காய்ச்சினால் சுவையான நெய் கிடைக்கும்.

- விமலா சடையப்பன்