*பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும்.
*முட்டைக்கோஸ் சாறு அருந்திவந்தால் வயிற்றுப் புண் மறையும்.
*பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்.
*தக்காளிச் சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.
*கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
*மொச்சையை அரைத்துப் பூச முகப்பரு மறையும்.
*கம்பை அரைத்து பாதங்களில் பூசினால் சளித் தொந்தரவு குணமாகும்.
*உப்பை அரைத்து உடம்பில் ஏற்பட்ட கட்டிகளில் தேய்த்து வந்தால் குணமாகும்.
*ஒரு துண்டு சுக்கினை வாயில் போட்டு நன்றாக மென்று அடக்கிக்கொள்ள உமிழ்நீர் பொங்கி பல்வலி தீரும்.
*ஆலிவ் எண்ணெயை தடவி வர முகத்தில் கரும் புள்ளிகள் மறையும்.
- நெ. இராமகிருஷ்ணன்


