*புதினா இலைகளை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து சிறிது உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.
*பப்பாளிப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் நோயின் பாதிப்பு குறைந்து குணமாகும்.
*சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறதா? தினமும் ஒரு நெல்லிக்காயைச் சாறு பிழிந்து பருகி வந்தால் எரிச்சல் தணியும்.
*மணத்தக்காளிக் கீரையைச் சமைத்து அடிக்கடி உணவுடன் சேர்த்துப் பயன்படுத்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளிட்டவை குணமாகும்.
*பாகற்காய் இலையை அரைத்து மார்பகங்களின் மீது பற்றாக போட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
*நன்கு கனிந்த பூவன் வாழைப்பழத்தை தேமல் உள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து சிறிது நேரம் கழித்து சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல் மறையும்.
*காது வலி நீங்க கிராம்புகள் சிலவற்றைத் தூள் செய்து தண்ணீரில் போட்டுக் கலக்கி வைத்து பிறகு அது நன்கு தெளிந்த பின் அந்த நீரில் இரண்டு சொட்டுகளைக் காதில் விட்டால் காது வலி குறையும்.
*முருங்கை இலைகளை உருவிய பின் மீதமுள்ள குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு மிளகு ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் அசதி நீங்கும்.
*அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், வெந்தயக் கீரையைச் சமையல் செய்து அதில் சிறிது தேங்காய்ப்பால் சிறிது நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு
வருவது நல்லது.
*பீட்ரூட் கிழங்கை உணவில் அடிக்கடி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாளடைவில் ரத்தம் விருத்தியாகும்.
*மகப்பேறு நேரம் நெருங்கும் போது இரண்டு தேக்கரண்டி தேனை நீரில் கலந்து உட்கொண்டால் சுகப்பிரசவம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- எல். நஞ்சன்


