Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உணவே மருந்து

*மீன் எண்ணெயோடு தேன் கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்களும் ஆறிவிடும்.

*தாய்மார்களுக்கு பால் கட்டிக் கொண்டால் அதன் மேல் தேன் பூசினால் குணமாகும்.

*முருங்கைக்காய் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோர்வை நீங்கும்.

*காட்டாமணக்கு செடிகளின் வேரை எடுத்து உரைத்து கீல்வாயுப் பிடிப்பில் பூசினால் கீல் வாத வாயுவலி தீரும்.

*தூதுவளை இலைகளை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் கபக்கட்டு நீங்கும்.

*பிரசவ வேதனை ஏற்படும் முன்னர் இரண்டு அவுன்ஸ் சுத்தமான தேன் குடித்தால் சுகமான பிரசவம் ஆகும்.

*சேற்றுப் புண்கள் மீது வேப்ப எண்ணெய் பூசினால் குணமாகும்.

*வாழைக்காய் சாப்பிடும் பொழுது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாயு வராது.

*வெற்றிலையோடு நல்ல மிளகு 2 சேர்த்து சாப்பிட்டால் பூரான் கடி விஷம் ஏறாது.

*பப்பாளி விதைகளை அரைத்து தேள் கடித்த இடத்தில் பூச விஷம் இறங்கி விடும்.

*முடக்கத்தான் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர வாதவலி, உடல் வலி வராது.

*தொடர்ந்து முட்டைக்கோஸ் சாப்பிட்டால் நெஞ்சு வலி வராது.

*நொச்சி இலையுடன் ஒரு டீஸ்பூன் மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா காய்ச்சல் கட்டுப்படும்.

*ஊமத்தையின் புதிய இலையை அனலில் வதக்கி வீக்கம் உள்ள இடங்களில் கட்டினால் வீக்கம் குறையும்.

*கறிவேப்பிலையை மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும்.

*இளநீர் தொடர்ந்து அருந்தினால் உடல் சூடு தணியும்.

*வெந்தயத்தை வேகவைத்து கடைந்து அடிக்கடி தின்றால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

*இரவு படுக்கும்போது பாத வெடிப்புகளில் வாசலின் தடவினால் வெடிப்பு சரியாகும்.

*வாழைத் தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் கல்லடைப்பு சரியாகும்.

*பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

- விமலா சடையப்பன்