Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உணவே மருந்து

*நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் வைத்துக் குடித்தால் முற்றிய இருமல் குணமாகும்.

*சமையலறையில் வெள்ளரிக்காய் தோலைப் போட்டால் எறும்புகள் வராது.

*வத்தல் குழம்பு வைத்து இறக்கும்போது ஓமத்தை தாளித்துக் கொட்ட செரிமானம் ஆகும்.

*தயிர் சாதத்திற்கு கடுகைப்போட்டு தாளிப்பதை விட ஓமம் போட்டு தாளித்தால் உடம்புக்கு நல்லது.

*முட்டைக்கோஸ் சாறை எடுத்து முகத்தில் தடவினால் சுருக்கம் மறையும்.

*சீரற்ற மாதவிலக்கு உள்ள பெண்கள் வெந்தயக்கீரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்ல பலன் கிடைக்கும்.

*எட்டி மரப்பட்டையை நெய்யில் வறுத்து தேய்த்தால் சொறி, சிரங்கு மறையும்.

*பூண்டு சாற்றில் சிறிது உப்பு கலந்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தேய்த்தால் சுளுக்கு போய்விடும்

*பனங்கிழங்கு புற்று நோயை தடுக்கும் திறன் கொண்டது. நார்ச் சத்து அதிகமுள்ளது பனங்கிழங்கு.

*ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டு சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும்.

*உடலில் தீ மூலம் கொப்புளங்கள் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெய்யும் சுண்ணாம்பும் சேர்த்து அதன் மீது தடவ சரியாகும்.

*உளுந்தங்கஞ்சி செய்யும்போது சுக்கைப் பொடித்து ஒரு ஸ்பூன் போட்டால் நல்ல சுவை கிடைக்கும்.

*வெந்நீரில் நசுக்கிய சோம்பைப் போட்டு ஊறவைத்து இரண்டு, மூன்று முறை பருகினால் கர்ப்பிணிகளின் வாந்தி நின்று விடும்.

- விமலா சடையப்பன்.