Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

*அதிமதுரத்தைப் பொடி செய்து எருமைப் பாலில் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

*பிரசவமான பெண்கள் 150 மி.லி. நீரில் 15 கிராம் மஞ்சள் தூளைப் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி குடித்து வர நச்சு நீர் வெளியேறி விடும்.

*பெண்கள் முலைக் காம்பில் வெடிப்பு இருந்தால் வேப்பிலையையும், மஞ்சளையும் வைத்து அரைத்து எடுத்து வெண்ணெயில் குழைத்துத் தடவினால் வெடிப்பு நீங்கி குணமாகும்.

*கடுகை நன்கு வறுத்துப் பொடியாக்கி சிறிதளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடித்தால் தொண்டைப் புண் ஆறி தொண்டை வலி குணமாகும்.

*கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கருஞ்சீரகம், அன்னாசிப்பழம், வெல்லம் ஆகியவைகளை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட்டு விடும்.

*அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் ஆகியவை நீங்கி குணமாகும்.

*கசகசாவுடன் கருப்பட்டி சேர்த்துப் பொடி செய்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

*இரவில் நீராகாரத்தில் யானை நெருஞ்சி இலையை போட்டு வைத்திருந்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினால் ‘கல்லடைப்பு’ நோய் குணமாகும்.

* தூதுவளைப் பொடியுடன் மிளகுப்பொடி சேர்த்து பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட தும்மல் நிற்கும்.

*எந்த விஷக்கடி என்றாலும் வெள்ளைப் பூண்டை அரைத்தெடுத்து கடிவாயில் வைத்துக் கட்டினால் குணமாகும்.

*மிளகு, சந்தனம், ஜாதிக்காய் ஆகியவற்றை ஒன்றாக வைத்து அரைத்தெடுத்து பருக்கள் மீது தடவிவந்தால் பருக்கள் மறைந்து விடும்.

*காலில் ஆணி இருந்தால் மருதோன்றி இலை, மஞ்சள், வசம்பு, கற்பூரம் ஆகியவற்றை அரைத்தெடுத்து கால் ஆணியில் வைத்துக் கட்டினால் ஆணி வெளியேறி குணமாகும்.

* வெந்தயக் கீரையை மைபோல் அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து இரவில் முகப்பருவில் தடவி காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு மறைந்து குணமாகும்.

*சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, ஓமம், வேப்பங்கொழுந்து, கழர்ச்சிப்பருப்பு ஆகியவைகளில் தலா 10 கிராம் எடுத்துப் போட்டு பதமாகக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு காலையிலும், இரவிலும் உணவிற்குப் பின் கால் தேக்கரண்டி வீதம் 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பிலுள்ள அனைத்து வாயுக்களும் அறவே நீங்கி விடும்.

*அதிமதுரம் இரண்டு கிராம் எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து எடுத்து இரண்டு நாட்கள் அந்தி சந்தி வேளைகளில் கொடுத்து வந்தால் அம்மை நோய் கண்டவரின் உடம்பிலுள்ள அளவுக்கு மீறிய உக்கிரமும் குறையும்.

*சீரகம் 4 கிராம், நீள் முள்ளி விதை 4 கிராம் எடுத்து பசும்பால் விட்டு நன்கு அரைத்து தினமும் காலை, மாலை ஒரு அவுன்ஸ் விதம் சாப்பிட்டு வந்தால் மது மற்றும் பித்தத்தினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

- இரா. ரெங்கசாமி