சாப்பிடும் உணவிலும் சில பழக்கங்களைக் கடைபிடித்தால் உண்ணும் உணவே உன்னத மருந்தாக இருக்கும்.
* பசி இல்லாத போது சாப்பிடாதீர்கள்.
* கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடாதீர்கள்.
* உடலுக்கு பொருந்தாத உணவுகளை சாப்பிடாதீர்கள்.
* அவசர அவசரமாக சாப்பிடாதீர்கள்.
* அளவுக்கு மீறிச் சாப்பிடாதீர்கள்.
* நன்கு மெல்லாமல் சாப்பிடாதீர்கள்.
* அதிக மசாலா கலந்த உணவை சாப்பிடாதீர்கள்.
* கெட்டுப் போன உணவுகளை சாப்பிடாதீர்கள்.
* காய்கறிகள் இல்லாமல் சாப்பிடாதீர்கள்.
* உணவுப் பொருள் அல்லாதவற்றை சாப்பிடாதீர்கள்.
* கவலையாக இருக்கும் போதோ, தூக்கம் மிகும்போதோ, மனக் குமுற லுடனோ உணவை சாப்பிடாதீர்கள்.
* புளிப்பு அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடாதீர்கள்.
* சாப்பாட்டு விசயத்தில் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
* வயிற்றை விரதம் என்கிற பெயரில் அடிக்கடி பட்டினி போடக் கூடாது.ஆனால் வாரம் ஒருமுறை ஒரு வேளை உணவு தவிர்த்தல் ஆரோக்கியம் கொடுக்கும்.
* சாப்பாடு விசயத்தில் காலையில் ஏழையாகவும், மதியம் பணக்காரனாகவும், இரவு கஞ்சனாகவும் நடந்து கொண்டால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* எப்போதும் நொறுக்குத் தீனிகளை உணவாக உட்கொள்ளக் கூடாது.
* எந்த உணவானாலும் மெல்ல ரசித்து மனத் திருப்தியுடன் சாப்பிட வேண்டும்.
* இரவு நிலக்கடலை சார்ந்த பண்டங்களை உண்ணக் கூடாது.
* முறையான உணவுப் பழக்க வழக்கங்கள் நீண்ட ஆயுளைத் தரும்.
* பழைய உணவையும், கொழுப்புள்ள உணவுகளையும், ஆயில் கலந்த உணவு களையும், ஒவ்வாத உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
* கீரையும், தயிரும் இரவில் சேர்க்கக் கூடாது.
* உப்பு, புளி, காரம் ஆகியவைகளை கூடிய வரை குறைத்துக் கொள்வது நல்லது.
* கசப்பைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* உணவு உண்டவுடன் சிறிது தூரம் நடந்தால் நல்லது.
* உணவை அப்படியே விழுங்காமல் மென்று சாப்பிட வேண்டும்.
* கூடியவரை இரவில் அசைவ உணவுகளை தவிர்ப்பதால் செரிமானக் கோளாறு, வாயுக் கோளாறு, தூக்கமின்மை ஏற்படாது. அசைவ உணவுகளை மதியம் சாப்பிடுவது நல்லது.
* தினமும் இருவேளையாவது வேகவைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இரவில் பழவகைகளையும், உணவு குறைவாகவும், காய்கறிகள் அதிகமாகவும் சாப்பிடுவது நல்லது.
- இரா. ரெங்கசாமி.
