* வெள்ளரிப் பழம் சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்
*பிஞ்சுக் கத்தரிக்காய் பசியைத் தூண்டும் சளி, இருமலை நீக்கும் இருதயத்தைப் பலப்படுத்தும் கபத்தை அறுக்கும் மலச்சிக்கலை நீக்கும்
*உணவில் மிளகு சேர்ப்பதால் இரத்தத்தில் சேரும் நஞ்சுகள் அன்றாடம் வெளியேற்றப்படுகிறது இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களின் செயல்கள் சீர் செய்யப்படுகிறது
*பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலை நீக்க பெரிய வெங்காயத்தையும் சீரகத்தையும் அரைத்துப் பாலில் கலந்து 7 நாட்கள் பருகி வர பலன் கிடைக்கும்
* விக்கலை நிறுத்த, கைப்பிடியளவு அம்மான் பச்சரிசி இலைகளை மென்று அதன் பால் பருகுங்கள் விக்கல் நின்று விடும்
*அவரைக் காயை சமைக்காமல் பச்சையாக காலை உணவாக உண்டு வந்தால் மலச்சிக்கலும், உடல் வலியும் நீங்கும் சர்க்கரை நோய் குணமாகும்
*மஞ்சள் காமாலைக்கு தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும்
*கோழிமுட்டை வெள்ளைக் கருவில் துணியை நனைத்து தொண்டைக் குழி மேல் வைக்க விக்கல் தீரும்
* சீரகம் சேர்த்துக் காய்ச்சிய நீரைப் பருகி வருபவர்களுக்கு உடனே ஜீரண மண்டலம் சீராகும் குடல் கிருமிகள் நீங்கும்
*இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட,வாந்தி கட்டுப்படும்
*கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நின்று விடும்
*முருங்கைப் பூ ஒரு பிடி எடுத்து 200 மிலி
பசுவின் பாலில் போட்டு பூக்கள் நன்றாய் வெந்து குழையும்படி காய்ச்சி இரவில் ஒரே வேளை சாப்பிட்டு வந்தால் உடலில் தாது சத்து அதிகரிக்கும்
*வில்வம் இலையை நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வர, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்
- எல். நஞ்சன்



