*நெல்லிக்காய் தட்டி சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து பதமாக காய்ச்சி சாப்பிட்டால் உடல் அலுப்பு தீரும்.
*வசம்பை மைய அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் சென்ற பின் அலசினால் பேன், பொடுகு , தொல்லை தீரும்.
*பாலூட்டும் தாய்மார்களுக்கு கேரட் சிறந்த உணவு. கேரட் சூப், கேரட் அல்வா, என எந்த வடிவத்திலும் செய்யலாம்.
*மாங்கொட்டையை தூக்கி எறிய வேண்டாம், கொட்டையை உடைத்து அதன் பருப்பை நன்றாக காய வையுங்கள். காய்ந்த பருப்பை தூளாகச் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
*தலையில் எதாவது இடித்து வீக்கம் ஏற்பட்டால் அதன் மேல் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் வற்றிவிடும்.
*வெள்ளைப்பால் மிளகை பசும்பாலில் அரைத்து தலைக்குத் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் பொடுகு தொல்லை கட்டுப்படும்.
*மூன்று ஸ்பூன் சர்க்கரையை வாயில் கொட்டி உடனடியாக விழுங்க, விக்கல் நிற்கும்.
*வாய்ப்புண், வாய்நாற்றம், ஈரல் நோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
*உடலில் அரிப்பு , நமைச்சல் இருந்தால் வேப்பிலையை தேய்த்துக் குளிக்க நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் குளிக்கலாம்.
*வாய்வுத் தொல்லைக்கு கட்டிப் பெருங்காயம் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்துக் குடிக்க உடனடி தீர்வு கிடைக்கும்.
- எஸ். சடையப்பன்.


