1. பல் ஈறு வீங்கி வலி ஏற்பட்டால், நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்தால் வலி நின்றுவிடும்.
2. முகத்தில் தழுப்புகள் ஏற்பட்டால், அவரை இலையை கசக்கி நன்கு தேய்த்தால் தழுப்புகள் மறைந்துவிடும்.
3. 100 மிலி தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலை மொட்டுகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தடவினால் அரிப்பு, எரிச்சல் தீரும்.
4. ஓமம், உள்ளி, துளசி இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால் இருமல், சளி, தலைவலி தீரும், முகம் பிரகாசிக்கும்.
5. இஞ்சித்துண்டை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைத்து சாப்பிட்டால் வாய்க்கசப்பு நீங்கும்...
6. வன்னி மரத்தின் இலையைப் பசும்பாலில் அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
7. காலை, மாலை இருவேளையும் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
8. அத்திப்பழத்தைத் தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
9. வெள்ளப்ப்பூண்டை வெற்றிலையில் சேர்த்து மசிய அரைத்து தினமும் குளித்தால் தேமல் மறையும்.
10. நகச்சுற்று இருந்தால், இரவில் மருதாணி இலையுடன் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, நகச்சுற்றின் மேல் பூசினால் நகச்சுற்று குறையும்.
11. ஜீரணக் கோளாறு அல்லது வயிறு உப்புசம் இருந்தால் சீரகத்தை லேசாக வறுத்து கொதிக்கவைத்த நீரைப் பருகலாம்.
12. தலைவலி ஏற்பட்டால் நெற்றியில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியைச் சிறிது நேரம் வைக்கலாம்.
13. தொண்டை வலிக்கு வெதுவெதுப்பான உப்புநீரால் கொப்பளிக்கலாம்.
14 . வயிற்றுப் பொருமலுக்கு இஞ்சியைச் சிறிதளவு சேர்த்து தயாரித்த இஞ்சி தேநீர் உதவியாக இருக்கலாம்.
15. உடல் சோர்வாக இருக்கும்போது எலுமிச்சைச் சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து நீரில் கலந்து குடிக்கலாம்.
- எஸ். சடையப்பன், காளனம்பட்டி


