*தினமும் இரவில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.
*ஒரு மிளகாயை குண்டூசியில் குத்தி அனலில் காட்டி வரும் புகையை சுவாசிக்க மூக்கடைப்பு நீங்கும்.
*சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் தேன் கலந்த நீர் குடித்த பின் சாப்பிடுவது அல்சர் நோயாளிகளுக்கு நல்லது. வயிற்றுப்புண் ஆறும்.
*சிறிது நல்லெண்ணெய் சிறிது உப்பு கலந்து அதை பற்பசை போல் பயன்படுத்தினால் பற்கள் வலிமை பெறும்.
*பச்சையாக வெங்காயத்தை உட்கொள்ள பிடிக்கா விட்டால் தயிருடன் சேர்த்து உண்ணலாம். உடலுக்கு நல்லது.
*தலை முடி கொட்டாமல் நன்கு வளர தினமும் ஒரு முட்டை உண்ணலாம். முட்டை சாப்பிட பிடிக்காதவர்கள் திராட்சைச் சாறு குடிக்கலாம்.
*காலையில் ஒரு தேக்கரண்டி தேனை தண்ணீரில் கலந்து குடித்து வர ஒற்றைத் தலைவலி விரைவில் குணமாகும்.
*வெற்றிலைச் சாறுடன் இஞ்சிச் சாறு சேர்த்து பருகினால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
*எலுமிச்சைச் சாறு, கேரட், பாதாம் பருப்பு இவை மூன்றையும் தினமும் அளவாக சாப்பிட்டு வந்தால் இதயம் நன்றாக இருக்கும்.
*மாதுளை தொடர்ந்து சாப்பிட்டு வர அறிவுத்திறன் பெருகும், மாதுளையில் வைட்டமின் பாஸ்பரஸ் சத்தும் நிறைந்திருக்கிறது.
*சமையலில் இஞ்சி சேர்ப்பதால் மூட்டுவலி வராமல் தடுக்கலாம்.
*பூண்டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிடு வதால் மூட்டு வலி குறையும்.
- விசாலாட்சி கண்ணன்



