Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

உணவே மருந்து

*ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிதளவு நன்கு பொடி செய்த ஏலக்காய் சேர்த்து சாப்பிட சளி மற்றும் இருமல் நீங்கும்

*ஒரு பங்கு ஆலிவ் எண்ணெயை சூடாக்கி மூன்று பங்கு தண்ணீரில் கலந்து காதில் விட்டால் காது வலி மறையும்.

*ஜலதோஷம் மற்றும் தலைவலி இருந்தால் நீலகிரி தைலத்தை சூடான நீரில் கலந்து ஆவி பிடித்தால் குணமாகும்.

*தூங்கும் முன்பு புகையிலை, டீ, காபி, போன்ற எதையும் எடுக்கக்கூடாது சூடான பாலில் மஞ்சள் கலந்து அருந்துவது நல்லது.

*உருளைக்கிழங்கை பசை போல அரைத்து தீ புண் மீது தடவினால் புண் விரைவில் ஆறும்.

*சோறு வடித்த நீரில் இரவு சிறிது வெந்தயத்தை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் மருந்தாக அமையும்.

*இளநீர் அல்லது தண்ணீருடன் வெந்தயத்தை உட்கொண்டால் உடல் சூடு தணியும் . வயிற்றுப்புண் மட்டுப்படும்.

*பெருங்காயத்தை தண்ணீர் விட்டு அரைத்து மார்பில் பற்று போட்டால் கக்குவான் இருமல் குணமாகும்.

*எலுமிச்சை ரசம் தொடர்ந்து ஆறுமாத காலம் சாப்பிட்டு வந்தால் நரை திரை மாறும்.

*அடிபட்டு சீழ் கட்டிக் கொண்டால் அதன் மீது சிறிது தேன் தடவ குணம் பெறும்.

*பாலில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க உடல் சதைப் பிடிக்கும்.

*சீதாப்பழ இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து அப்படியே விழுங்க, குடலில் உள்ள புழுக்கள் வெளியேறிவிடும்.

*தினமும் காலையில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து உட்கொண்டால் எளிதில் எந்த வியாதியும் உங்களை நெருங்காது.

*பாலில் இரண்டு பல் பூண்டு சேர்த்து வயதானவர்களுக்கு கொடுக்க இரவில் நல்ல உறக்கம் வரும்.

- எஸ். சடையப்பன்.