Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* கெட்டி தயிர், மஞ்சள் இரண்டையும் கலந்து தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் பளபளக்கும்.

* பல் கூச்சத்தால் அவதிப்படுபவர்கள் பப்பாளிப் பழத்தை நான்கு நாட்கள் சாப்பிட்டால் பல் கூச்சம் நீங்கி விடும். ஈறும் பலம் பெறும்.

* கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்பார்வை நன்றாக இருக்கும். வாய்வு பிடிப்பு நீங்கும். வயிறு சுத்தமாகும்.

* அறுகம்புல் சாறு எடுத்து, சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். நிறைய வைட்டமின்களும், தாது உப்புக்களும் அறுகம்புல்லில் இருப்பதால் உடம்புக்கும் நல்லது.

* ஒரு கைப்பிடி கல் உப்பை சின்ன மூட்டையாகக்கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் அரிசியை நெருங்காது.

* ஒரு கப் தண்ணீரில் கடுகு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் அதனுள் உள்ள வாடை போய்விடும்.

* ஏப்பம் அடிக்கடி வந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு மென்று விழுங்கினால் ஏப்பம் நின்றுவிடும். (தினம் 2 வேளை 2 நாட்கள்).

* சிறிது ஆவாரம்பூ இலையை மைய அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் வைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறு தனலில் வதக்கி அதை சுத்தமான பருத்தித் துணிவைத்து புண் இருக்கும் இடத்தில் கட்டிவிட வேண்டும். இது போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டி வந்தால் சர்க்கரை நோயால் உண்டான குழிப்புண் மாயமாக மறைந்துவிடும்.

* கற்பூரம் வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பஞ்சைப் போட்டு வைத்தால் கற்பூரம் நின்று நிதானமாக எரியும்.

* கீரையை பொடியாக நறுக்கி, தண்ணீர் தெளித்து, மைக்ரோ ஓவனில் ஒரு நிமிடம் வைத்து ஆறியபின் தோசை மாவில் சேர்க்கக் கிடைப்பது சத்தான தோசையாகும்.

- எஸ். சடையப்பன்.