*எருக்கம் பூவினால் ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சிரைப்பும், இருமலும் குணமாகும்.
*எருக்கம் பாலை விஷ ஜந்துக்களின் கடிவாயில் தடவினால் விஷம் உடலில் பரவாது.
*எருக்கன் இலை சிறந்த மலமிளக்கியாகும். புழுக்களைக் கொல்லும் தன்மையும் உடையது.
*எருக்கம் பூ ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
*பழுக்காத உடல் கட்டிகளுக்கு எருக்கன் இலையை வதக்கி கட்டி மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறி குணமாகும்.
*எருக்கம் பூவோடு மிளகு, கிராம்பு வைத்து அரைத்து தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் மூச்சுத் திணறல் குணமாகும்.
*அரச மரத்தின் விதைத் தூளை தேனில் குழப்பிச் சாப்பிட்டால் ஆண் மலடு நீங்கும்.
*அரச மரத்தைக் கீறி வரும் பாலை பித்த வெடிப்பில் தடவினால் குணமாகும்.
*புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர சுக்கிலம் விருத்தியாகும்.
*வெண்டைக்காயில் கந்தகச் சத்து அதிகம் இருப்பதால் மூளையைப் பலப்படுத்தும். அறிவுத் திறமை ஏற்படும்.
*மாங்காயை வாரம் ஒரு முறை குழம்பில் போட்டோ, ஊறுகாயாகவோ உணவுடன் சேர்த்து வந்தால் வாய்க் கசப்பு நீங்கும். ருசியின்மை, பசியின்மை, உணவின் மீது வெறுப்பு ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.
*நெல்லிக்காய் அமிர்தம் போன்றது. இதமான நெல்லிக்காய்த் தொக்கு, நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் லேகியம் செய்து சாப்பிடலாம். இதனால் தலை சுற்றல், தலைப்பாரம், கபால நீர், பினிசம் நாசியில் நீர் வடிதல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, இருமல், மேகப் புண், பித்தம், ஜீரணமின்மை, பசி, ருசியின்மை, மலச்சிக்கல், வாத நோய்கள் குணமாகும்.
*பூசணிக்காயின் காய்ந்த தோலும், சீரகமும் கலந்து கஷாயம் செய்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு நோய்கள் குணமாகும்.
*சீரகம், கொத்தமல்லி விதை, திராட்சை ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து தினமும் குடித்தால் பித்தம் நீங்கி விடும்.
- இரா. ரெங்கசாமி.
