*அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வியர்க்குரு வேனல் கட்டிகள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
*உணவு சாப்பிடும் முன் ஆலிவ் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.
*தயிர்சாதத்திற்கு கடுகு தாளித்து கொட்டுவதற்கு பதில், ஓமம் தாளித்துக் கொட்டினால் வாசனையாகவும் இருக்கும். நன்கு செரிமானம் ஆகும்.
*பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டுச் சாப்பிட்டால் வயிற்று வலி சரியாகும்.
*காலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் தேனை, அதே அளவு இஞ்சி சாறும் கலந்து குடித்தால் கை, கால் நடுக்கம் கட்டுப்படும்.
*அல்சர் இருப்பவர்கள் சாப்பாட்டுக்கு அரைமணி நேரம் முன்போ, பின்போ தேன் சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
*சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள்தூளும், சிறிது பனங்கற்கண்டும் சாப்பிட்டுவர வயிறு உப்புசம் நீங்கும்.
*வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் சீரகத்தை பொடிசெய்து கொதி நீரில் கலந்து குடித்தால் சரியாகும்.
*தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்பது தவறான கருத்து.
*மிளகாய்ப்பொடி அரைக்கும்போது உலர்ந்த கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டால் சாம்பார் வாசனையாக இருக்கும்.
*மருதாணி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் சேற்றுப் புண் ஆறும்.
*முட்டைகளை வேகவைக்கும்போது நீரில் கொஞ்சம் உப்புப் போட்டால் உரிக்க எளிதாக இருக்கும்.
- விமலா சடையப்பன்


