Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* சீரகத்தைப் பொன்வறுவலாக பொரித்து தூளாக்கி சம அளவு நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக் கொண்டு காலை-மாலை உணவுக்கு முன்பு ½ டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர வாய் குமட்டல், தலை சுற்றல், விக்கல், வாய் கசப்பு, மஞ்சள் காமாலை குணமாகும்.

* கொத்துமல்லி இலைகளை கழுவிச் சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வாயில் போட்டு விழுங்கி அதன் மேல் தண்ணீர் பருகினால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

* மிளகை நன்கு பொடியாக்கி 50 கிராம் எடுத்து அதனோடு 600 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி வடிகட்டி 25 மில்லி அளவாக 3 வேளை அருந்தினால் தொண்டை கமறல் மற்றும் வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைக்கு பலன் கிடைக்கும்.

* கொண்டைக் கடலையை பச்சையாக எடுத்து வெந்நீர் விட்டு அரைத்தெடுத்து நெற்றிப் பொட்டுகளில் தடவினால் தலைவலி நீங்கும்.

* வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதினால் ஜீரண சக்தியை உண்டாக்கி உடலின் உஷ்ணத்தைத் தணிக்கிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இருதயத்திற்கு நல்ல சக்தியையும் அளிக்கிறது.

* தினமும் ஓர் ஆரஞ்சுப் பழத்தை உட்கொண்டு வந்தால் இதய சம்பந்தமான எந்த கோளாறும் ஏற்படாமல் காப்பதுடன் இதயத்தைப் பலப்படுத்தவும் உதவும்.

* நெல்லிக்காயை தட்டிச் சாற்றைப் பிழிந்தெடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து பருகி வந்தால் குடலில் உள்ள கசடுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.

* இலந்தைப் பழம் உண்பதால் வயிற்றுப்போக்கு, சீதபேதி, மலச்சிக்கல், நீரிழிவு நோய் தீரும்.

* தண்டுக் கீரையை மூல நோய் உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் கட்டுப்படும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் ஆகியவற்றை சமமாக எடுத்து அரைத்துத் தூள் செய்து ஒரு தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து உட்கொண்டால் இருமல் குணமாகும்.

- எல். நஞ்சன்.