* சேற்றுப்புண்கள் மீது வேப்ப எண்ணெய் பூசினால் குணமாகும்.
* வாழைக்காய் சாப்பிடும் பொழுது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாயு வராது.
* வெற்றிலையோடு நல்ல மிளகு 2 சேர்த்து சாப்பிட்டால் பூரான் கடி விஷம் ஏறாது.
* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கடித்த இடத்தில் பூச விஷம் இறங்கி விடும்.
* முடக்கத்தான் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர வாதவலி, உடல்வலி வராது.
* தொடர்ந்து முட்டைக்கோஸ் சாப்பிட்டால் நெஞ்சுவலி வராது.
* நொச்சி இலையுடன் ஒரு டீஸ்பூன் மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா காய்ச்சல் கட்டுப்படும்.
* ஊமத்தையின் புதிய இலையை அனலில் வதக்கி வீக்கம் உள்ள இடங்களில் கட்டினால் வீக்கம் குறையும்.
* கறிவேப்பிலையை மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும்.
* இளநீர் தொடர்ந்து அருந்தினால் உடல்சூடு தணியும்.
* வெந்தயத்தை வேகவைத்து கடைந்து அடிக்கடி தின்றால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
* இரவு படுக்கும்போது பாத வெடிப்புகளில் வாசலின் தடவினால் வெடிப்பு சரியாகும்.
* வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் கல்லடைப்பு சரியாகும்.
* பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
- விமலா சடையப்பன்.
