Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பறக்கும் படை சோதனையில் ரூ.12.72 லட்சம் பறிமுதல்

இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் நடத்திய சோதனையில் மாடு வியாபாரிகள் இருவர் உள்பட 9 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததாக 12 லட்சத்து 72 ஆயிரத்து 860 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 ரொக்கம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.